இன்றைய நாளில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் :
- கிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான்.
- கிமு 480 – தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.
- 1011 – டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர்.
- 1227 – புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
- 1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
- 1717 – ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.
- 1832 – இலங்கையில் கட்டாய வேலை ஒழிக்கப்பட்டது.
- 1848 – அங்கேரியப் படையினர் குரொவாசியர்களை பாகொஸ்த் என்ற இடத்தில் இடம்பெற்ற முதலாவது அங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
- 1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் உரோமைக் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயசு மீண்டும் அமைத்தார்.
- 1864 – எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையேயான எல்லை லிஸ்பன் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது.
- 1885 – உலகின் முதலாவது திராம் சேவை இங்கிலாந்து, பிளாக்பூல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1911 – இத்தாலி உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது.
- 1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
- 1923 – கட்டளைப் பலத்தீன் நிறுவப்பட்டது.
- 1940 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இரண்டு அவ்ரோ விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு, இரண்டும் இணைந்து பாதுகாப்பாகத் தரையிறங்கின.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1949 – சீனப் பொதுவுடமைக் கட்சி பின்னாளைய மக்கள் சீனக் குடியரசின் பொதுத் திட்டத்தை அறிவித்தது.
- 1954 – ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 1971 – ஓமான் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது.
- 1972 – சப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.
- 1979 – எக்குவடோரியல் கினியின் இராணுவத் தலைவர் பிரான்சிசுக்கோ மசியாசு மேற்கு சகாராவின் படையினரால் சுடப்பட்டார்.
- 1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது
Discussion about this post