தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் 4 முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க உள்ளது. பெரும்பாலும் செப்டம்பர் 11ம் தேதி வாக்கில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் சட்டசபை கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல்நாள் அமைச்சரவையை கூட்டினார். அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தனர்.
ஆன்லைன் சூதாட்ட சட்டம் :
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி காரணமாக நிறைய பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.. சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர், பேராசிரியர் என்று படித்தவர்கள், படிக்காதவர்கள் பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி குறித்து முதல்வர் ஸ்டாலின் கறாராக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதற்கு எதிராக அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை சட்டசபையில் தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் பெற உள்ளனர். அந்த சட்டத்தின் முழுமையான விவரங்கள் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதும் வெளியாகும். அதேபோல் சட்டம் எப்படி அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகும்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை :
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் முடிந்தது.இந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். சசிகலா, திரு சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது போலீஸ் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டால் பலரின் தலை உருளும்.
தலை உருளும் :
இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. ஜெயலலிதாவிற்கு கடைசியில் உடல்நிலை குன்றியது எப்படி என்ற எய்ம்ஸ் அறிக்கை மட்டுமே வெளியானதே தவிர ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை இன்னும் சீக்ரெட்டாகவே உள்ளது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் போது அறிக்கை முழுமையாக வெளியே வரும். அதில் இருந்து பல பூதங்கள் வெளியே வரும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவில் சில தலைவர்களும் இந்த அறிக்கையை ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை :
இது போக தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையை முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தாக்கல் செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலினிடம் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். போலீசார் மோசமாக நடந்து கொண்டது தொடர்பாக விவரமாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கை வெளியாகும் பட்சத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பலர் விமர்சனங்களில் சிக்க வாய்ப்புகள் உள்ளன.
Discussion about this post