சதுரங்க வேட்டை 2 :
H. வினோத் இயக்கத்தில், இத்திரைப்படத்தின் முதல் பாகம் உருவானது. அதில், நம்மை சுற்றி நடக்கும் ஏமாற்று தொழில்களை மையப்படுத்தி கதைக்களம் அமைந்த்திருந்தனர். நடராஜ் கதாநாயகனாக நடித்திருந்த அத்திரைப்படம் வெற்றி பெற்றது.
இரண்டாம் பாகத்தில், தொழில்நுட்பங்களால் நகர மக்கள் ஏமாறுவதை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், அரவிந்த் சாமி, திரிஷா, நாசர், ராதாரவி, ஸ்ரீமன், பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின், கதை, திரைக்கதை, வசனம் H.வினோத் எழுத, சலீம் படத்தினை இயக்கிய என் வி நிர்மல் குமார் இயக்கவுள்ளார். இப்படத்தினை மனோபாலா தயாரிக்கிறார்.
2022 அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
அறிவுமதி, யுகபாரதி பாடல்வரிகளை எழுத, அஸ்வின் விநாயகமூர்த்தி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Discussion about this post