ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கான அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் பொறுப்பேற்ற திமுக அரசு, இணையவழி சூதாட்டங்களை தடுப்பதற்கு புதிய சட்டம் இயற்றும் வகையில். அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
அக்குழு கடந்த ஜூன் மாதம் அரசிடம் அறிக்கை அளித்த நிலையில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதையடுத்து சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்ட ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவையின் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில், சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரிவாக ஆலோசிக்க, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
Discussion about this post