ஒரு காலம் இருந்தது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என அண்ணா சொன்னார். ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி பங்கேற்றார். அதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் வகுப்புவாரி பிரநிதித்துவம், பெண்களுக்கு வாக்கு உரிமை, மொழிவாரி மாநிலம் பிரிப்பு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்துரிமை, சத்துணவு திட்டம் போன்ற முன்னோடி சிந்தனைகள் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் முதல் சட்ட திருத்தம் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தால் தான் கொண்டு வரப்பட்டது என அப்போதைய பிரதமர் நேரு அவர்களே தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டார்.
ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை பெற்று தருவதே சமூகநீதியின் முதன்மையான குறிக்கோள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு காலம் இருந்தது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என அண்ணா சொன்னார். ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.
Discussion about this post