செப்டம்பர் 26 (September 26) கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 270 ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள் :
1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
1687 – ஏத்தன்சு நகரத்தை முற்றுகையிட்ட ஒட்டோமான் படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
1777 – பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.
1783 – மாசசூசெட்சில் ஆயுதக் கிளர்ச்சி ஷேய்சின் கிளர்ச்சி ஆரம்பம்.
1907 – நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம்.
1934 – ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
1950 – ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.
1950 – இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது.
1954 – ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் :
1820 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்திய மெய்யியலாளர், ஓவியர் (இ. 1891)
1833 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல்வாதி (இ. 1891)
1849 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936)
1867 – வின்சர் மெக்கே, அமெரிக்க ஓவியர் (இ. 1934)
1890 – பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973)
1897 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (இ. 1978)
1908 – பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987)
1913 – திருக்குறள் வீ.முனிசாமி, தமிழறிஞர் (இ. 1994)
1923 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர் (இ. 2011)
1932 – மன்மோகன் சிங், இந்தியாவின் 14வது பிரதமர்
1965 – பெத்ரோ பொரொசென்கோ, உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்
1979 – டாவி ரோயிவாசு, எசுத்தோனியாவின் 1வது பிரதமர்
1981 – செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை
Discussion about this post