கொரோனா வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து, அதற்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் ஆராச்சி செய்து வந்தன. கடின முயற்சியில் வெற்றி கண்டுள்ளது ரஷ்யா.
ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிபர் புதின் மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார். கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் பரிசோதனையில் அவர் ஈடுபட்டார் என்று சொல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில், ரஷ்யா உருவாக்கி வரும் மருந்தை பெருமளவு உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் உலக சுகாதார அமைப்பான WHO, ‘ரஷ்யா, கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குதலில் முறையாக அனைத்துவித விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பான மருந்தை உருவாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தது.
Discussion about this post