இந்தியா :
நாட்டிலேயே முதன் முறையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதன் முறையாக ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
காலரா, மஞ்சள் காமாலை, அம்மை போன்ற நோய்களுக்கு கூட தடுப்பு மருந்து இல்லாமல், மக்கள் கொத்து கொத்தாய் மடிந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந் தொற்றுக்கூட விஞ்ஞானிகள் உடனடியாக மருந்து கண்டுபிடித்து அசத்தி வருகின்றனர். இருப்பினும் வெளிநாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா இப்போது தான் மருத்துவத்துறை சார்ந்த அதிநவீன வளர்ச்சிகளில் முன்னேறி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வியத்தகு வகையில் டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனை மையத்தில் உள்ள மருந்துவர்கள் நோயாளி ஒருவருக்கு, ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் ஃபருகாபாத் பகுதியைச் சேர்ந்த 39 வயதான நோயாளி ஒருவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக டையாலிசிஸ் செய்து வந்தார். இதனிடையே அவரது மனைவி தனது சிறுநீரகத்தை தானம் கொடுக்க முன்வந்ததை அடுத்து, அந்த நபருக்கு மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டனர்.
சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் விஎம்எம்சியின் கீழ் இயங்கி வரும் சிறுநீரகம், ரோபோடிக்ஸ் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை துறையின் தலைவர் பேராசிரியர் அனுப் குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழு மூலம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post