சென்னை :
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னையில் தோனி விளையாடுவது உறுதியாகிவிட்டது. அதற்கான ஸ்பெஷல் நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திலும், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மும்பையிலும் நடைபெற்றது.
தோனியின் ஆசை :
இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளாக தனது சொந்த மண்ணில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை மக்கள் முன்பு தான் என்னுடைய கடைசி போட்டியில் விளையாடுவேன். அதன் பிறகு தான் ஓய்வு பெறுவேன் என்று தோனி பலமுறை கூறி இருந்தார். ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
சூப்பர் அறிவிப்பு :
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி இன்று ஒரு சூப்பர் அறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டதால், இன்று முதல், இந்திய கிரிக்கெட் பழைய முறைக்கு திரும்ப உள்ளது என்று குறிப்பிட்டார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து உள்நாட்டு போட்டிகளும், பழைய விதிகள் படி நாடு முழுவதும் உள்ள மைதானங்களில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பழைய முறையில் ஐபிஎல் :
இதே போன்று அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளும் பழைய முறைப்படி 10 அணிகளும் சொந்த மண்ணில் ஒரு போட்டி, அந்நிய மண்ணில் ஒரு போட்டி என்ற வகையிலேயே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே கேப்டன் தோனி 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு திரும்புவது உறுதியாகி உள்ளது.
சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி :
இன்னும் 6 மாதங்கள் உ4ள்ள நிலையில், அதற்குள் சென்னை சேப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பார்வையாளர்கள் மாடங்கள் அமைக்கப்பட்டு விடும். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் பழைய படி, ரசிகர்கள் சூழ, தோனி ஹெலிகாப்டர் ஷாட்களை தமிழக ரசிகர்கள் பார்க்கலாம். இதே போன்று அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் தொடரும் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
Discussion about this post