பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் ஒரு பிழை/பக் இருந்தது. அதன் மூலம் இன்ஸ்டாகிராமில் போடப்படும் ரீலின் தம்ப்நெய்லை எந்த கணக்கிலிருந்தும் மாற்றலாம்
ஜெய்ப்பூரைச் சேர்ந்த நீரஜ் சர்மா என்ற மாணவர், கோடிக்கணக்கான மக்களின் சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்யாமல் காப்பாற்றியதற்காக இன்ஸ்டாகிராமில் இருந்து ரூ.38 லட்சம் பரிசு பெற்றுள்ளார்.
ஷர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு பிழையைக் கண்டறிந்தார், இதன் காரணமாக உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் இல்லாமல் எந்தவொரு பயனரின் கணக்கிலும் தம்ப்நெய்ல் உருவங்களை மாற்ற முடியும். இந்த தவறு குறித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு தெரிவித்த சர்மாவிற்கு, அது உண்மையானது என்று கண்டறிந்த பிறகு, அவரது பணிக்காக ரூ.38 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
நீரஜ் சர்மா செய்தியாளர்களிடம் பேசும் போது , “பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் ஒரு பிழை/பக் இருந்தது. அதன் மூலம் இன்ஸ்டாகிராமில் போடப்படும் ரீலின் தம்ப்நெய்லை எந்த கணக்கிலிருந்தும் மாற்றலாம். கணக்கு வைத்திருப்பவரின் கடவுச்சொல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அதை மாற்ற கணக்கின் மீடியா ஐடி மட்டுமே தேவை என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிகழும் தவறுகளைக் கண்டறிய ஆரம்பித்தேன். பல கடின உழைப்புக்குப் பிறகு, ஜனவரி 31 காலை, இன்ஸ்டாகிராமின் (பிழை) தவறை நான் அறிந்தேன். இதற்குப் பிறகு, இன்ஸ்டாகிராமில் இந்த தவறு குறித்து பேஸ்புக்கிற்கு ஒரு அறிக்கையை அனுப்பினேன், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது.
ஷர்மா 5 நிமிடங்களில் மற்றொரு நபருடைய ரீல் தம்ப்நெய்லை மாற்றிக் காட்டினார். அவர்கள் அவரது அறிக்கையை ஏற்றுக்கொண்டனர். மே 11 அன்று, அவருக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வந்தது, அதில் அவருக்கு $ 45,000 (சுமார் ரூ. 35 லட்சம்) வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதே நேரத்தில், வெகுமதி வழங்குவதில் நான்கு மாதங்கள் தாமதத்திற்குப் பதிலாக, பேஸ்புக் 4500 டாலர்களை (சுமார் ரூ. 3 லட்சம்) போனஸாக வழங்கியது.
Discussion about this post