கிராப் நரம்பியல் வலையமைப்பு (GNN) மாதிரியானது மூலக்கூறுகளின் ஆயிரக்கணக்கான உதாரணங்களை உணர்ந்து மாட்டிறைச்சி,பூ, மின்ட் மனம் போன்ற லேபிள்கள் உடன் இணைக்கப்பட்டது.
கூகுள் மனிதனைப் போன்றே நாற்றத்தை கணிக்கும் திறன் கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளது. கூகுள் AI குழுவால் உருவாக்கப்பட்ட இது, மூலக்கூறு கட்டமைப்பை கொண்டு பொருளின் நறுமணத்தை கண்டறிய முயல்கிறது. மனிதர்களால் இன்னும் கவனிக்க முடியாத வாசனையைக் கூட இதனால் கணிக்க முடியும்.
நிறங்களை எப்படி கண்டறிந்தது?
நிறங்களைக் கண்டறிய சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களின் ஃபோட்டான்களை உணர மூன்று உணர்ச்சி ஏற்பிகள் நமது மனித கண்களில் காணப்படும். அதை அடிப்படையாக வைத்து தான் நிறத்தைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிகளை உருவாக்கியுள்ளனர்.
வாசனையை கணிப்பது ஏன் கடினம்?
காற்றில் பரவும் மூலக்கூறுகள் மூக்கில் இருக்கும் உணர்திறன் ஏற்பிகளுடன் ஒட்டிக்கொள்ளும் போது வாசனை உணரப்படுகிறது. இருப்பினும், நிறத்தை விட வாசனையை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில், வாசனையை உணர நமது மூக்கில் 400 க்கும் மேற்பட்ட ஏற்பிகள் உள்ளன. அதே போல் பிரதிபலிக்கும் நுண்ணறி பொறிகளை உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலானது.
ஃபோட்டான்களை விட மூலக்கூறுகள் பல வழிகளில் வேறுபடுகின்றன. வெவ்வேறு வண்ணங்களைக் காண்பிப்பதற்கான வண்ணச் சக்கரம் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் அதே வேளையில், தனித்துவமான வாசனைகளைத் திட்டமிடுவதற்கு ஒரு வாசனை வரைபடம் இதுவரை ஏதும் இல்லை.
ஆய்வு என்ன சொல்கிறது?
2019 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் வாசனையின் வகைகளின் மூலக்கூறு கட்டமைப்பின் இடைவெளியை ஆராயத் தொடங்கினர். அந்த கிராப் நரம்பியல் வலையமைப்பு (GNN) மாதிரியானது மூலக்கூறுகளின் ஆயிரக்கணக்கான உதாரணங்களைக் கற்றுக்கொள்வதற்காக முயற்சி செய்தது. அவை உணரும் வாசனை மாட்டிறைச்சி,பூ, மின்ட் மனம் போன்ற லேபிள்கள் உடன் இணைக்கப்பட்டது.
அந்தத் தரவுகளை அடிப்படையாக வைத்து விஞ்ஞானிகள் உணர்வு வரைபடத்தின் பண்புகளுடன் “முதன்மை வாசனை வரைபடத்தை” (POM) உருவாக்கி உள்ளனர்.
மனிதர்கள் ஒருபோதும் மணக்காத புதிய மூலக்கூறுகளின் நாற்றங்களையும் உணர்ந்து கணிக்க இந்த நுண்ணறி பொறிக்கு கற்றுக் கொடுப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான விலங்குகளின் உணர்திறன் ஏற்பிகள், நியூரான்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றின் செயல்பாட்டை போல் இந்த பொறியும் நன்கு கணிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர். இந்த கண்டுபிடிப்பு வளர்சிதை மாற்றத்தின் கட்டமைப்பின் மூலம் நமது இயற்கை உலகத்துடன் தொடர்புடையது என்பதை நிறுவுகிறது.
POM ஐப் பயன்படுத்தி, உணவு மற்றும் வாசனை திரவியங்களை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தரக் கண்காணிப்பு மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நோய்களைக் கண்டறிதல் ஆகியவற்றில் உள்ள சிக்கல்களுக்கு புதிய தீர்வுகளைக் கண்டறிய இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.
Discussion about this post