டெல்லி :
அதிமுகவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பேசுவதற்காக நேற்று திடீரென டெல்லி சென்ற நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் என கூறிவரும் ஓ.பன்னீர்செல்வமும் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமையாக, நிரந்தர பொதுச் செயலாளராக யார் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற பரபரப்பு அதிமுகவின் நீண்ட காலமாகவே தொற்றிக் கொண்டுள்ளது. தற்போதைய சூழலில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை தான் ஓங்கியுள்ளது.
இதனிடைய கட்சியில் நீண்ட காலமாக பயணிக்கும் ஓ.பன்னீர்செல்வமும் நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என தனது பலத்தை நிரூபிக்க போராடி வருகிறார். இதனால் அதிமுகவில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி இந்த டெல்லிக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் அதிமுக இடைக்கால பொது செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி. நேற்று இரவு விமான மூலம் டெல்லி சென்ற அவர் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி அதிமுக பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேச இருப்பதாகவும் அதன் காரணமாகவே டெல்லி சென்றிருப்பதாக அவர் தரப்பு ஆதரவாளர்கள் கூறினர். மேலும் இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க முயற்சித்தார்கள்.
அமித் ஷா இதை அடுத்து எடப்பாடி சந்திக்க அமித் ஷா நேரம் ஒதுக்கிய நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து இன்று காலை திட்டமிட்டபடி எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து பேசினார். டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
அதிமுக விவகாரம் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடன மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்து பேசினர். எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பு நிறைவடைந்துள்ள இந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
நேரம் கேட்கும் ஓபிஎஸ் தற்போது ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி மறைந்து ஓராண்டு நிறைவடைந்து நிலையில் ராமேஸ்வரத்தில் திதி கொடுத்த பின் காசி சென்றிருக்கிறார். அவருடன் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் எம்பி.யும் காசி சென்றுள்ள நிலையில் தற்போது அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காசியிலிருந்து நேராக டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை சந்தித்து பேசுவார் எனவும், இன்று அல்லது நாளை இந்த சந்திப்பு இருக்கும் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு அதிமுக நிர்வாகிகள்.
Discussion about this post