புரோக்சிமா செண்ட்டாரி பி (Proxima Centauri b) அல்லது புரோக்சிமா பி (Proxima b) என்பது நமது சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற செங்குறு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தினுள் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும். இது புவியில் இருந்து கிட்டத்தட்ட 4.2 ஒளியாண்டுகள் (1.3 புடைநொடிகள், 40 திரில்லியன் கிமீ, அல்லது 25 திரில்லியன் மைல்கள்) தொலைவில் செண்ட்டாரசு விண்மீன் தொகுதியில் காணப்படுகிறது.
இதுவரை அறியப்பட்ட புறக்கோள்களில் இதுவே நமது சூரியக் குடும்பத்திற்கு மிகக்கிட்டவாகவுள்ள புறக்கோளும், மிகக்கிட்டவாகவுள்ள வாழ்தகமைப் பிரதேசத்தில் உள்ள புறக்கோளும் ஆகும்.
2016 ஆகத்து மாதத்தில், ஐரோப்பிய சதர்ன் வான்காணகம் இக்கோளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது.”அடுத்த சில நூற்றாண்டுகளில்” இக்கோளுக்கு தானியங்கி விண்ணாய்வுப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆரைத்திசைவேக முறை மூலம், விண்மீனின் நிறமாலை வரிகளின் சுழற்சிமுறை டாப்ளர் பிறழ்ச்சியின் மூலம் ஆய்வாளர்கள் இப்புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாய்வுகளின் படி, புவு குறித்தான இப்புறக்கோளின் வேகத்தின் கூறு கிட்டத்தட்ட 5 கிமீ/ம ஆகும்
Discussion about this post