சென்னை :
சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து உடன் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த யூட்யூபரான டிடிஎஃப் வாசன், இனிமேல் அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் எனவும், என்னை கைது செய்யச் சொல்லி எனது வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விட வேண்டாம் என கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஜிபி முத்துவுடன் ரைட் மேலும் பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து ஹெல்மெட் கூடல் அணியாமல் இருந்தது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. காமெடிக்காக என்றாலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டும் டிடிஎஃப் வாசல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அடுத்தடுத்து செய்திகள் வெளியான நிலையில் பிடிஎஃப் வாசனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இந்த நிலையில் தான் இனிமேல் வேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் சரண்டர் ஆகி விடுகிறேன் என டிடிஎஃப் வாசன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
மன்னிப்பு அந்த வீடியோவில் பேசி உள்ள டிடிஎஃப் வாசன்,” நகைச்சுவைக்காகவே ஜிபி முத்து அண்ணாவுடன் நான் இந்த வீடியோவை எடுத்தேன். அவர் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனம் ஓட்டியதில்லை. நான் 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலே வண்டியை ஓட்டியதால் அந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் நான் வேண்டும் என செய்யவில்லை. வீடியோவை பார்க்கும் சாதாரண மக்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வரவேண்டும் என தான் பார்க்கிறார்கள். எனவே ஜிபி முத்து அண்ணாவுடன் காமெடிக்காக தான் நான் அந்த வீடியோவை செய்தேன். ஆனால் அது இவ்வளவு பெரிய விவகாரமாக ஆகும் என்ன நினைக்கவில்லை.
ஸ்பாயில் பண்ணிராதீங்க :
இதற்கு முன் பிரச்சனை வந்த போதே நான் மெதுவாக வண்டி ஓட்ட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் தெரியாமல் இப்படி நடந்து விட்டது. செய்தி சேனல்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான், தெரியாமல் செய்துவிட்டேன். இதற்காக என்னை கைது செய்ய வேண்டும் லைசென்ஸை கேன்சல் செய்ய வேண்டும் என சொல்லாதீர்கள். இது என்னை ரொம்ப பாதித்துவிட்டது. இனிமேல் நான் இப்படி வண்டி ஓட்ட மாட்டேன். என்னை கைது செய்து ஜெயிலில் அடைத்து என் வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விடாதீர்கள். நான் செய்தது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Discussion about this post