கொரோனா லாக்டவுன் காலத்தில் ‘ஜூம்’(Zoom) என்ற வார்த்தையைப் பயன்படுத்தாத பணியாளர்களே இல்லை எனும் அளவிற்கு இதன் தேவை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன்பட்டது. லாக்டவுனின் போது ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற ஸ்டார்ட்அப் முதல் ஐடி நிறுவனங்கள் வரை அனுமதி அளித்தன. எனவே ஊழியர்கள் உடனான வாரத்திர மற்றும் மாதந்திர கலந்தாய்வு கூட்டங்கள், வர்த்தகம் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் என அனைத்துமே ஜூம் செயலி மூலமாகவே நடத்தப்பட்டது.
ஜூம் ஆப்பில் உள்ள வீடியோ கான்பரன்சிங்கிற்கான முக்கியத்துவம் லாக்டவுன் காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது. கொரோனாவின் போது மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை போட்டா போட்டி போட்டாலும், ஜூம் அளவிற்கு எளிமையான, விரைவான பயன்பாட்டை தர முடியாமல் திண்டாடின.
அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வீடியோ கான்பிரன்சிங் சேவை நிறுவனமான ஜூம், தற்போது உலகிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் போட்டி போட தயாராகியுள்ளது. தி இன்ஃபர்மேஷன்(The Information) அறிக்கையின்படி, கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலைப் போலவே, ஜூம் நிறுவனமும் Zmail என்ற மின்னஞ்சல் சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் Zcal எனப்படும் காலண்டர் ஆப்-யையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள வருடாந்திர Zoomtopia மாநாட்டில் இந்த இரண்டு புதிய சேவைகளையும் ஜூம் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது, வீடியோ கான்பரன்சிங் இயங்குதளமான ஜூம், உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான யூஸர்களைக் கொண்ட ஜிமெயில் போன்ற பெஹிமோத் மற்றும் ஆப்பிள் ஐபாட், ஐபோன்(iPhone) அல்லது மேக்புக்கைப் பயன்படுத்துபவர்களையும் உள்ளடங்கிய செயலிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
கூகுள் எதிராக விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலில் வெற்றி காண ஜூம் நிறுவனம் தனது மெயில் சேவை பயன்பாட்டை உருவாக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே ஜூம் மெயில் சேவை நிச்சயம் ஜி மெயிலுக்கு போட்டியாக இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் ஜூம் வீடியோ கான்பிரன்சிங் சேவையிலும் புதுப்புது மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. ‘ஜூம் டீம் சேட்’ (Zoom Team Chat) என்ற வசதியை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிடுள்ளது.
Discussion about this post