ஆமதாபாத் :
குஜராத்தில், மருத்துவக் கல்லுாரி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டது.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல்(Bhupendrabhai Patel) தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆமதாபாதில் மாநகராட்சிக்குச் சொந்தமான மருத்துவமனை உள்ளது. இதன் வளாகத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரி செயல்படுகிறது. இந்நிலையில், ஆமதாபாத் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது.
இதில், அதன் தலைவர் ஹிதேஷ் பரோத்(Shidhesh Baroth) ”மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மருத்துவக் கல்லுாரிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படும்,” என அறிவித்தார். கடந்த ஆண்டு, ஆமதாபாதில் கட்டப்பட்ட பிரமாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டதை அடுத்து, தற்போது மருத்துவக் கல்லுாரிக்கும் அவரது பெயர் சூட்டப்பட உள்ளது.
Discussion about this post