கெட்ட கொழுப்பை கரைக்க எலுமிச்சை சாறுடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிங்க,
நமது வீட்டிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய இரண்டு பொருட்களை வைத்து உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.
நம்மில் பலர் தற்போது பணி சூழ்நிலை காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. இதனால் நமது உடலுக்கு அதிக இயக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. ஒரு சின்ன ட்ரிங்க் உங்களது உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம்! அதுதான் உண்மை. வாருங்கள் அந்த முக்கியமான டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.
உடல் எடை குறைப்பு:
மிக எளிதில் உடல் எடை கூடி விடுகிறது. ஆனால் அதை குறைப்பது என்பது அவ்வளவு சாத்தியமானதாக இருப்பதில்லை. நம்மில் பலரும் அதிக தொப்பை காரணமாக கஷ்டப்படுகிறோம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. அவைதான் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி. இதனுடன் சில எளிதான டிப்ஸ்களை நாம் கையாளும் போது நமது உடல் எடை குறைவதில் நல்ல ஒரு தீர்வினை காணமுடியும்
டீடாக்ஸ் வாட்டர்:
இந்த டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. இதனால் உடல் எடையை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடிகிறது. நமது சமையலறையில் கிடைக்கும் சில எளிய பொருட்களை வைத்து இந்த ட்ரிங்கை நம் வீட்டிலேயே செய்ய முடியும். இது போன்ற பானங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை மிகுந்ததாக தயாரிக்கப்படுகிறது.
பானகம்:
இதை “பானக கல்பனா” என்று ஆயுர்வேதத்தில் கூறுகிறார்கள். அதாவது உடனடி நிவாரணம் தரும் மருந்து என்று பொருள்.
இதுபோன்ற பானங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கிறது. இவை நமது ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்து உடனடியாக அதன் வேலையை செய்யத் தொடங்குகிறது. எனவே தான் இதுபோன்ற பானங்களை குடித்த உடன் நமது உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கிறது.
Discussion about this post