தமிழகம் :
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம் இன்று தொடங்கப்படவுள்ள நிலையில், திட்டத்தின் மெனு அதன் அளவு என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்
தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை – உப்புமா வகை
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசு உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்
செவ்வாய்கிழமை – கிச்சடி வகை
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவாகாய்கறி கிச்சடி
புதன்கிழமை – பொங்கல் வகை
ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்
வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்
வியாழக்கிழமை – உப்புமா வகை
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார்
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளிக்கிழமை – கிச்சடியுடன் இனிப்பு
எதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாய்கிழமை உணவு வகையின்படி)
ரவா கேசரி
சேமியா கேசரி
மேலும் வாரத்தில் 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளையும் அரசு வழங்கியுள்ளது.
Discussion about this post