சீனாவின் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் பல கார்ப்பரேட் நிறுவனங்களும், தங்களது இருப்பினை மெதுவாக சீனாவில் குறைக்க தொடங்கியுள்ளன.
கொரோனாவின் வருகைக்கு பிறகு சீனா கடைபிடித்த ஜீரோ கோவிட் பாலிசி, சீனாவின் பல கடுமையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.
இதன் காரணமாக சீனாவின் தங்களது உற்பத்தி செய்து பல கார்ப்பரேட்களும் தங்களது இருப்பிற்கு மாற்றாக, இந்தியா, வியட்நாம் என பல நாடுகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளது.
இந்தியாவில் தொடங்க ஆர்வம் :
குறிப்பாக இந்தியாவின் மாபெரும் சந்தையை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, இந்தியாவில் தங்களது செயல்பாட்டினை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வெளி நாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் தங்களது செயல்பாட்டினை தொடர ஆர்வம் காட்டி வருகின்றன. அவர்கள் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி காணும் என்று நம்புகின்றனர்.
நிறுவனங்களுக்கு சலுகை:
மேலும் இந்திய அரசும் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீடுகளை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக மத்திய அரசின் பிஎல்ஐ திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு வரி சலுகை உள்பட பல சலுகை என பலவற்றையும் வழங்கி வருகின்றது.
இந்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள்:
இந்தியா-வின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள், உள்நாட்டு என அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் இருக்கும் பல நிறுவனங்களும் இந்தியாவுக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றன. தங்களது உற்பத்தியினை இந்தியாவில் செய்ய விரும்புகின்றன. குறிப்பாக அரசின் பிஎல்ஐ போன்ற திட்டங்கள் அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அரசின் பிரம்மாண்ட திட்டம் :
அரசின் இந்த பிஎல்ஐ திட்டமானது, நாட்டின் பொருளாதார உற்பத்தியினை மேம்படுத்த 14 முக்கிய துறைகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டங்கள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்டோமொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், ஓயிட் குட்ஸ், ஜவுளித் துறை, கெமிக்கல் என பல துறைகளும் இதில் அடங்கும்.
பிஎல்ஐ திட்டத்தின் நோக்கம்:
இந்த பிஎல்ஐ திட்டமானது குறிப்பாக நாட்டின் உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இறக்குமதியினை குறைத்து ஏற்றுமதியினை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இறக்குமதி செலவினையும் குறைக்க முடியும். செலவினங்களையும் கட்டுக்குள் வைக்க முடியும். மேலும் இந்தியாவும் சர்வதேச அளவில் சிறந்த ஏற்றுமதி நாடாக மாற இது வழிவகுக்கும்.
வளர்ச்சிக்கு உதவும்:
இதன் மூலம் நிறுவனங்களும் சலுகைகளை பெறுவதாக அவர்களின் உற்பத்தியினை பெருக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கும் இது உந்துதலாக அமையும். மேலும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யவும் இது வழிவகுக்கும். தற்போது இந்த பிஎல்ஐ திட்டத்தின் மூலம் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரி பாகங்கள், டெலிகாம், ஸ்டீல், நெட்வொர்க்கிங் பொருட்கள், மின்சாரம், தொழில் நுட்ப பொருட்கள் பல துறைகளில் விரிவாக்கம் செய்துள்ளது.
Discussion about this post