சிவகார்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெஜினா. இதன்பின் ராஜதந்திரம், மாநகரம், சக்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் இவர் மிகவும் பிரபலமான நடிகையாவார்.
இந்நிலையில் நடிகை ரெஜினாவின் அதிர்ச்சி கொடுக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், அவருக்கு விரைவில் திருமணம் என்று சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள நடிகை ரெஜினா முதல் முறையாக திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
” 2020ஆம் ஆண்டு என்னுடைய காதல் முறிந்தது. அதிலிருந்து வெளிவர கொஞ்ச நாட்கள் ஆனது. இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. ஏனென்றால், சிறு வயது முதல் எனது சொந்த காலில் சுயமாக எப்படி வாழ்வது என்பதை பற்றி தான் என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாரவது துணையாக வேண்டுமா? வேண்டாமா என்பது குறித்து யோசிக்க மாட்டேன் ” என்று பேசியுள்ளார் ரெஜினா.
இதனால், நடிகை ரெஜினா தனது வாழ்க்கையில் திருமணமே செய்துகொள்ள போவதில்லை என்பது போல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
Discussion about this post