ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு “நவீன கோவில்கள்” என அழைக்கப்படும் “ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மிகவும் அவசியம்” என நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். எனவே நம் நாட்டின் அணுவியல் துறையில் முன்னேற்றத்தைக் காண 1958-ல் அறிவியல் கொள்கைத் தீர்மானம் இயற்றப்பட்டது, இந்தத் தீர்மானத்தின் மூலம் “நல்ல கல்விக் கொள்கைகளைக் கொண்ட அறிவியல் வளர்ச்சியை துரிதப்படுத்தி, தொலைநோக்குப்பார்வையுடன் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும்” என்ற கொள்கை வரையறுக்கப்பட்டது,
தொழில் நுட்ப கொள்கை மற்றும் மேலாண்மை (Science and
இந்தியா விடுதலை அடைந்தபோது அதற்கு முன்பே உருவாக்கப்ட்ட அறிவியல் அடித்தளத்தின் மீது அறிவியல் – தொழில்நுட்ப தகவல் தொடர்பு தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1971 -ல் அறிவியல் தொழில்நுட்பத்துறை தோற்றுவிக்கப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பல்வேறு திட்டங்கள் கீழ்கண்ட துறைகள் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி
- நுண்ணுயிரியல் தொழில்நுட்பம்
- பெருங்கடல் வளர்ச்சித்துறை
- விண்வெளி ஆராய்ச்சித்துறை
- அணுமின்னியியல். மின்னணுவியல்
- சுற்றுப்புறம் மற்றும் வனவியல் துறை
இவைத் தவிர, பல்வேறு அமைச்சகங்களைச் சார்ந்த துறைகளும் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம், இந்திய வேளாண்மை வளர்ச்சிக் கழகம், நீர்ப்பாசனம் மற்றும் மின் சக்தி போன்ற துறைகளும் அடங்கும். இக்கொள்கை உலகத் தொழில்நுட்பப் போட்டியை எதிர்கொள்ளவதற்காக உருவாக்கப்பட்டன.
2003-ல் கொண்டு வரப்பட்ட அறிவியல் தொழில் நுட்பக் கொள்கை “இந்தியாவை முக்கியமானதொரு அறிவு சக்தியாக” உருவாக்குவதாகும். இக்காலத்தில் அறிவியல் விருதுகள் வழங்கப்படுகின்றது. பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியின் விளைவாக 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும், 120 அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்களும் நவீன எரிசக்தி மையங்கள், உயிரியல், தகவல் பொருள், திரவ படிகங்கள் போன்றவற்றின் ஆராய்ச்சிகளில் ஈட்டுபட்டுப் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிந்தன.
அணு ஆற்றல் ஆணையம்
1948-ல் அணு ஆற்றல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட அணு ஆற்றல் ஆணையத்தின் தலைவர் ஹோமி பாபா ஆவார். இதன் நோக்கம் இரண்டு.
அவை
- அணு ஆற்றலை உற்பத்திக்குப் பயன்படுத்துதல்
- அணு ஆற்றலை வேளாண்மை, உயிரியல், தொழில் மற்றும் மருத்துவ முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதாகும். அமைதிக்கும் அணு (Atom for peace) என்ற உறுதியான கொள்கை அடிப்படையில் இந்திய அணு ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஐந்து அணு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.
- மும்பையில் உள்ள பாபா அணு ஆற்றல் ஆராய்ச்சி மையம் (BARC)
- தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR)
- இந்தூரில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (CAT)
- கொல்கத்தாவில் உள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (VECCC)
- ஐதராபாத்திலுள்ள அணு ஆராய்ச்சி நிலையம் (AMD) இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் துணைகொண்டு தமிழ்நாடு கூடங்குளத்தில் 200 MW திறன் கொண்ட அணு ஆற்றல் மின் உற்பத்தி திட்டம் (Atomic Power Project) ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. சென்னை அருகில் கல்பாக்கத்தில் அணு ஆற்றலைக் கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.
நம் இந்திய நாடு அணு ஆற்றல் வளர்ச்சிக்கு முதன்மை அளிப்பது போல விண்வெளி ஆய்வுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. 1962-ல் இந்திய தேசிய விண்வெளிக் குழு உருவாக்கப்பட்டது. 1963-ல் நிக்கே அப்பாச்சே (Nicke Apache) என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 1972-ல் விண்வெளி ஆணையம் (Space Commission) மற்றும் விண்வெளித்துறை (Department of Space) தொடங்கப்பட்டன. ஒருங்கிணைந்த, நெறிப்பாட்டு ஏவுகணை மேம்பாட்டுச் செயல்திட்ட அடிப்படையில், பிருத்வி, திரிசூல், ஆகாஷ், நாக் ஆகிய ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
image Credits to : https://www.ctrl.blog/entry/news-destination-tax.html
Discussion about this post