லண்டன்:
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதிய ராஜாவாக சார்லஸ் பதவியேற்பார் என தெரிகிறது.
பிரிட்டன் மகாராணி 2-ம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் தான் இரண்டாம் எலிசபெத்.
96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்த போதும் அவர், அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.
புதிய அரசர் இந்த நிலையில், கடந்த 2 நாட்களாகவே, ராணியில் உடல் நிலை ஆரோக்கியமாக இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர் காலமானார்.. ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார்.
73 வயதான சார்லஸ்இங்கிலாந்தின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் வழக்கப்படி, ராணி உயிரிழந்த 2ம் நாள் காலை, பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். அதுவரை அவர் இடைக்கால அரசராக செயல்படுவார்.. ராணி இறந்த மறுநாள், அதாவது இன்று மீண்டும் கொடிகள் ஏற்றப்பட்டு காலை 11 மணிக்கு சார்லஸ் அதிகாரப்பூர்வமாக மன்னராக பதவியேற்பார். இன்று மாலை அரச தலைவராக தனது முதல் உரையை அவர் ஆற்றுவார்.
அறிவிப்பு
இதனிடையே, இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணம் அடைந்ததையடுத்து இன்று நடைபெறவிருந்த இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது… இந்த ஆட்டம் மறுபடியும் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post