ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 14 சீரீஸ் ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவைத்தார். ஐ-போன் 14 சீரிஸ் ரகத்தில் மொத்தம் 5 வகை போன்கள் வெளியாகியுள்ளன. ஐபோன் 14 -ன் தொடக்க விலை 79 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும்.
ஐபோன்(iphone) 14 பிளஸ் – ன் தொடக்க விலை 89 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் ஐபோன் 14 புரோ-வின் தொடக்க விலை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 புரோ மேக்ஸ் -ன் தொடக்க விலை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 900 ஆகும். இதன் அதிகபட்ச விலை 1,89,900 ஆகும்.
ஐபோன் 14 ரக செல்போன்கள் வரும் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போன்களில் அவசர காலத்திற்கு செயற்கைக்கோள் வழி அழைப்புகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ளவர்கள் 2 ஆண்டுகளுக்கு இச்சேவையை இலவசமாக பெற முடியும்.
இதுபோல் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எஸ்.இ.(SE) ரகத்தில் மொத்தம் 8 நிறங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்ச்களின் விலை 29 ஆயிரத்து 900 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ்-8 ரகத்தின் தொடக்க விலை 45 ஆயிரத்து 900 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ- 2 என பெயரிடப்பட்டுள்ள ஏர்பட்ஸ்களின் விலை 26 ஆயிரத்து 900 என்றும் டிம் குக் அறிவித்தார்.
Discussion about this post