ட்விட்டர் பற்றிய ஒரு மிகப்பெரிய செய்தி வந்துள்ளது. இனி பயனர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று ட்விட்டரிலும் ட்வீட் செய்த பிறகு அதை எடிட் செய்ய, அதாவது திருத்த முடியும். இதற்கான எடிட் பட்டனை ட்விட்டர் தொடங்கியுள்ளது! இருப்பினும், முதலில் சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைட்) கணக்குகளுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். ட்வீட்டை எடிட் செய்யும் வசதி வேண்டும் என்று பயனர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கும் ட்வீட் செய்து எடிட் பட்டனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு வரை, எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த ஒப்பந்தம் இப்போது சில தடைகளை சந்தித்துள்ளது. ட்விட்டரில் எடிட் பட்டன் இல்லாததும் ஒரு முக்கிய தடையாக இருந்தது.
ட்வீட்டை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யலாம் :
ட்வீட் செய்த பிறகு, அடுத்த அரை மணி நேரத்தில் பயனர்கள் அதை எடிட் செய்ய முடியும். ட்விட்டர் தற்போது இதற்கான சோதனையை தொடங்கியுள்ளது. பயனர்கள் தங்கள் கணக்கில் எடிட் பட்டனைப் பார்த்தால், அது சோதனைக்காக உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என ட்விட்டர் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் கணக்கு சரிபார்க்கப்பட்டவர்களுக்கு மட்டுமே (வெரிஃபைட் அகவுண்ட்) இந்த வசதி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்வீட்டின் அசல் ஹிஸ்டரி அப்படியே இருக்கும் :
நீங்கள் ஒரு விஷயத்தை ட்வீட் செய்து, பின்னர் அதை மாற்ற நினைத்தால், மாற்றுவதற்கான வசதி கிடைக்கும். ஆனால், அந்த செய்தியின் முழு ஹிஸ்டரியும் பக்கத்தில் தெரியும். அதாவது, முதல் ட்வீட்டில் இருந்து மாற்றப்பட்ட ட்வீட் வரை அனைத்தும் காணப்படும்.இந்தியாவில் இந்த வசதி எப்போது கிடைக்கும் என்பதை சொல்வது கடினம்.
கவனமாக இருக்க வேண்டும் :
எடிட் செய்யும் வசதி இருப்பதால், முதலில் தேவையற்ற அல்லது சர்ச்சைக்குரிய எதையாவது ட்வீட் செய்துவிட்டு, பிறகு திருத்த்திக்கொள்ளலாம் என நினைப்பது தவறு. ஏனெனில், அசல் ட்வீட்டில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பயனர்களால் பார்க்க முடியும்.
Discussion about this post