பொதுக்குழு தொடர்பாக அளிக்கப்பட்டிருந்த வழக்கில் உச்சநீதி மன்றம் எட்டப்பாடிக்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததை அடுத்து இந்நாளினை விழாவாக கொண்டாடிய தொண்டர்கள் இ.பி.எஸ் , ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.
ஜூலை 11 ஆம் தேதியன்று கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டப்படி செல்லும் என்றும் தனி நீதிபதியின் உத்திரவு ரத்து செய்யப்படுகிறது என்ற இரு தீர்ப்புகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மகிழ்ச்சி அளித்துள்ள்ளதாகவும் கிடைத்த வெற்றியை கொண்டாடப்படும் தருணம் இது என்றும் திரு. ஜெயகுமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இந்த வழக்கானது மேல்முறையீடு செய்யும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post