கலங்க வைத்த கலிங்கப் போர்
அசோகர் கலிங்கத்துப்போர் முடிந்த கையேடு பாடலிப்புத்தூர்க்கு திரும்பிய போது அந்த நெடும் பயணத்தில் வெற்றிக்கொடிகள் பறந்தாலும் சக்கரவர்த்தியின் கண்கள் சோகத்துடன் வெறித்த வண்ணம் இருந்தன! அவர் யாரிடமும் பேசாதது குறித்து அவரது பிரதான தளபதிகள் கவலையுற்றார்கள். தலைநகர் திரும்பிய உடனே இறுக்கமான முகத்துடன் மன்னர் ‘டிக்டேட்’ செய்ய, ஒரு கல் வெட்டு தயாரானது.
பட்டாபிஷேகம் நடந்து எட்டாண்டுகளுக்கு பிறகு மகிமை பொருந்திய கலிங்கா நாட்டை வெற்றி கொண்டுள்ளார். லட்சக்கணக்கான வீரர்கள் அப்போரில் கொல்லப்பட்டர்கள். மனிலும், லட்சக்கணக்கான வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள். போர் என்பது நிகழும் பொழுது எத்தனை கொலைவெறி தாண்டவமாடுகிறது. இது தாங்கமுடியாத வருத்தத்தையும் மாட்சிமைதாங்கிய சக்கரவர்த்திக்கு தந்திருந்தது. இதுபோன்று கொடுமை நூறில் ஒரு பங்கு. ஏன், ஆயிரத்தில் ஒரு பங்கு மறுபடியும் நிகழ்ந்தாலும் சக்கரவர்த்தியால் தாங்கி கொள்ள முடியாது. தர்மம், சமாதானம், அமைதி, இதுவே இனி மன்னரின் குறிக்கோளாக இருக்கும்’ இப்படியாக ஆரம்பிக்கிறது கல்வெட்டு.
கலிங்க போர், அசோகர் மகுடம் சூட்டிக்கொண்டு பிறகு நிகழ்ந்த முதல் யுத்தமா என்பது பற்றி குறிப்புகள் எதுவும் இல்லை.அனால் அதுவே அவர் ஈடுப்பட்ட கடைசிப் போர்.
கி.மு 261-ல் கலிங்கப் போர் நடந்தது. பிறகு மூன்று வருஷாவருஸ்வருடங்கள் அசோகர் புத்தமத கோட்பாடுகளை பின்பற்ற ஆரம்பித்தார். அதை தொடர்ந்து அசோகரின் கல்வெட்டுகள் ஏதோ கையெழுத்துப் பிரிதிகள் போல ‘காப்பி’ எடுக்கப்பட்டு இந்தியா முழுவழுதும் அன்பையும் தர்மத்தையும் பரப்பின.
கி.மு 258-ல் அசோகர் விலங்குகளை வேட்டையாடுவதற்க்கு தடை விதித்தார். வேட்டைக்கு செல்லாத மன்னர்களே உலக வரலாற்றில் கிடையாது என்கிற நிலையில் அசோகரின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தியது. அப்படியென்றால் சக்கரவர்த்தி அரண்மனைக்குள்ளேயே முடங்கி கிடைக்க போகிறாரா என்கிற சலசலப்புகளும் எழுந்தன.
அனால் சக்கரவர்த்தியோ வேட்டைக்கு பதிலாக கோலாகலமான விழாக்களையும் ஊர்வலங்களும் தொடங்கி அதில் நேரடியாக கலந்துகொண்டார். அந்த ஊர்வலத்தில் பௌத்த மத பிரச்சாரங்கபாலும் தர்மத்தை போதிக்கும் நாடகங்களும் நடந்தன.
அசோகர் தன கல்வெட்டுகளை 1..2..3… என்று நம்பர்கள் கொடுத்தார். இரண்டாம் கல்வெட்டிலேயே அவர் எழுதி வைத்தது இதுதான்!
தாய் தந்தை இருவரையும் வணங்கி அவர்களின் அறிவுரையை குழைந்தைகள் பெற வேண்டும் என்பதே அரசரின் விருப்பம். யூரினங்களிடம் அன்பு பாராட்ட வேண்டியதும் அவசியம். கொள்ளமாய் குடிமக்களின் முக்கியமான கடமைகளில் ஒன்று. எந்த விலங்கினத்தையும் கொள்வது குற்றம் என்று மன்னர் தெரிவிக்க விரும்புகிறார். உண்மை பேசுவதை எல்லோரும் கடைபிடித்தல் அவசியம். ஆசிரியர்களிடம் மாணவர்கள் மிக பணிவுடன் நடந்துகொள்ளவேண்டும். வீடு தேடி வரும் விருந்தாளிகளை உபசரிக்காமல் இருப்பது மிகப்பெரிய தவறு. அசோகரின் இந்தக் கருத்துக்களை யாரால் மீரா முடியும்?
அசோகர் இறைவழிபாட்டில் ஈடுபட்டதாக தெரியவில்லை. அதேசமயம் கடவுள் இல்லை என்கிற பிரச்சாரம் அவருடைய எந்தக்கல்வெட்டிலும் இல்லை.
Discussion about this post