அதிகரித்துவரும் கொரோனா
மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வந்தது.
சோதனைகள் தீவிரம்
கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில், சீனாவின் பல இடங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுஜன சோதனைகள் தொடர்கின்றன.
சீனா:
ஆகஸ்ட் 30 அன்று 51 பேருக்கு COVID-19 நோய்த்தொற்றுகளை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனை அடுத்து மில்லியன் கணக்கான மக்கள் லாக்டவுனை எதிர்கொண்டுள்ளனர். சீனாவில் ஜீரோ-கோவிட் கொள்கை, அதாவது யாருக்குமே கொரோனா பாதிப்பு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் கொள்கையால், நாட்டின் தலைநகரைச் சுற்றியிருக்கும் சீனாவின் ஹெபே மாகாணத்தில் மீண்டும் கடுமையான லாக்டவுன் மற்றும் வெகுஜன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு நடைபெற உள்ள நிலையில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜினில் உள்ள 1.3 கோடி மக்களும் கட்டாயமாக வெகுஜன கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவில் மொத்தம் 5,439 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 4,44,21,162 ஆக உள்ளது. நாட்டில் COVID-19 செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 65,732 ஆக குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
Discussion about this post