பிச்சை எடுத்து இதுவரை ரூபாய் 50 லட்சத்திற்கும் மேலாக அரசுக்கு நிவாரண நிதியாக வழங்கி உள்ளார் தூத்துக்குடியை சேர்ந்து சமூக சேவகர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தாலுகா ஆழங்கிணறைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு திருமணமாகி 2 மகள், 1 மகன் உள்ளனர். பம்பாயில் தேய்ப்புக்கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் 15 வருடம் பணி செய்து குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார். அதன்பின் 2010ம் ஆண்டில் தமிழ்நாடு வந்த இவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்து உள்ளனர்.
இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிச்சை எடுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வந்தார். அரசு பள்ளிகளுக்காக, கொரானா நிதி , இலங்கை தமிழர்க்கு என நிவாரண நிதி வழங்கி வந்தார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வருகை தந்த சமூக சேவகர் இருக்கண்குடி கோவில் திருவிழாவிற்கு வந்து தங்கி கோவில், வீடு, கடைகளில் பிச்சை எடுத்து ரூ.10 ஆயிரம் சேமித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டியிடம் இலங்கை தமிழர்களுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இதுவரை இவர் இது போன்று ரூ 50 லட்சத்து 60 ஆயிரம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post