மாணவர்களுக்கு நன்னடத்தையும், கல்வியும் கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஒய்யாரமாய் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மாணவர் ஒருவரை தன் கைகளுக்கு மசாஜ் செய்யுமாறு வற்புறுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாதா பிதா குரு தெய்வம் என்று கூறுவார்கள். ஆசிரியர் என்றால் தெய்வத்திற்கு முன்னால் என்று சிறுவயதில் இருந்தே நமக்கு கற்றுக் கொடுத்து வளர்ப்பார்கள். காரணம் நாம் எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் அதற்கு ஆசிரியர்களே முழுமுதற் காரணமாக இருப்பார்கள்.
வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் பாடம் எடுக்காமல் சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு சின்னஞ்சிறு மாணவர் ஒருவரை தனக்கு மசாஜ் செய்யுமாறு மிரட்டுவதையும் அந்த குழந்தை பயந்து போய் ஆசிரியரின் கைகளுக்கு மசாஜ் செய்வது போலவும் காட்சிகள் உள்ளன. இது குறித்து அந்த மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் விசாரணை செய்து அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளனர். விசாரணையில் அந்த ஆசிரியரின் பெயர் ஊர்மிளா சிங் என்றும் அவர் ஹர்தோய்(Hardoi) மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை கல்வியாளர்கள் பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
Discussion about this post