முதல் ஆதி மனிதன் ஒரு பெண் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. சுருக்கமாக சொன்னால் முதல் மனிதன் ஆதாம் இல்லை ஏவாள் தான்! அதுவும் அவள் ஐரோப்பிய வெள்ளைக்கார ஏவாளும் இல்லை. ஆப்பிரிக்கக் கருப்பு ஏவாள்!
சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் ஆப்ரிக்காவின் தென் பகுதியில் ஒரு மலைச்சரிவில் நடந்து சென்றாள். மலை அடிவாரத்தில் கடல்! கடற்கரையை நோக்கி அவள் நடந்து சென்றதிருக்க வேண்டும். கடலோரமாக செத்துக்கிடந்த ஏதோ பிராணி அவள் கண்ணில் பட்டிருக்க வேண்டும். அதை சாப்பிடுவதற்காக அவள் மலைச்சரிவில் இருந்து கீழே இறங்கியிருக்கலாம். அல்லது வெறுமனோ அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறி கடலை வெறித்துப் பார்த்து கொண்டிருந்திருக்கலாம். அவள் மனதில் என்ன ஓடியது, யாருக்கு தெரியும்?
ஒரு நல்ல விஷயம். நடந்து சென்ற அவள் தன் காலடிச்சுவடுகளை விட்டு போயிருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்தக்காலடிச்சுவடுகளை கண்டுபிடித்தார்கள். ஆராய்ச்சி நடத்தியதில், அந்த சுவடுகள் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிய வந்ததும் விஞ்ஞான உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. சும்மா இல்லை, சந்திரனில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் முதல் காலடிக்கு இணையானது அல்லவா அது.
நம்மை போலவே கைகள் வீசி சாதாரணமாக நடந்த அந்த பெண்ணிடம் விசேஷ ஜீன் இருந்தது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். மீட்டோ காண்ட்ரியல் டி.என்.ஏ என்கிற ஜீன் அது. உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் உருவாக அடிப்படைக்காரணமான சக்தி அந்த ஜீன் தான், விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும் முதலில் சக்தி இல்லையேல் சிவம் இல்லை.
கி.மு. என்று ரொம்ப ரொம்ப பின்னோக்கி சென்றால் மனிதனுக்கும், குரங்குகளுக்கும், ஒரே ஒரு முன்னோர்தான் என்பது தெரிய வருகிறது. அத முன்னோரிடமிருந்து இரு கிளைகள் பிரிகின்றன. ஒன்று குரங்கு வகைகள், இன்னொன்று மனித வகைகள்!
Discussion about this post