பருவநிலை மாற்றம் காரணமாக சீனாவில் 1961-ம் ஆண்டுக்கு பிறகு நடப்பாண்டில் அதிக அளவிலான வெயில் பதிவாகியுள்ளது. கடந்த புதன்கிழமை 40 டிகிரி செல்சியஸ்(104*F) வெப்பம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக நிலவும் வறட்சி காரணமாக சிச்சுவான் மற்றும் மத்திய சீன பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. அந்த பகுதியில் உள்ள கால்நடை, விவசாய பயிர்களுக்கு போதிய நீர் இல்லாததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கால்நடைகளை தற்காலிகமாக நீர் உள்ள பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக வீடு, அலுவலங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post