அதிமுகவை காப்பாற்றும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு வந்திருப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
கடலூரில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன் விசாரணை கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராகி விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் நாஞ்சில் சம்பத். அப்போது பேசுகையில், அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர் என்று நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது. ஏனெனில் தன்னை முதலமைச்சராக்கிய சசிகலா தலையிலே கைவைத்து, அவரையே கட்சியிலிருந்து நீக்கியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதோடு திரு.எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு.பன்னீர்செல்வம் இருவரும் சசிகலாவோடு இணைவதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
Discussion about this post