அகண்டவெளியின் வரலாற்றில் சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய மண்டலமோ, பூமி என்கிற கிரகமோ கிடையாது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அகண்டவெளியில். சிதறிய வண்ணம் இருந்த தூசியும், துகள்களும், கொதித்துக்கொண்டிருந்த சிறிய சிறிய கற்களும் இணைந்து ஒரு நெருப்புக்கோளமாக உருண்டு திரண்டது. பிறகு அதன் மேற்பரப்பு பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்துகொண்டே வந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது.
அந்த உருண்டை சூரிய மண்டலத்தின் தலைவனான சூரியனை சுற்றி வரவும் ஆரம்பித்தது. ‘பூமி‘ என்று நாம் இப்போது அழைக்கும் அந்தப்பெயரில்லாத உருண்டையின் எந்த இடுக்கிலும் புல், செடி,கொடியோ கடுகளவு உயிரினமோ கிடையாது. அப்போது பூமி ஒரு வெறும்- 7927 மைல் விட்டமுள்ள மிதக்கும் பாறை.
சுமார் நூறு கோடி ஆண்டுகளுக்கு பிறகே கடல்கள் உருவாகின. அநேகமாக 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பே எப்படியோ ஒரு விசித்திரம் நிகழ்ந்ததில் கடலுக்குள் பாக்டீரியா என்கிற நுண்ணுயிர்கள் தோன்றின. நியாயமாக இந்த பாக்டீரியாக்கள் தான் நம் முதன்மையான எள்ளுத் தாத்தா!
கூடவே செடிகள் வளர ஆரம்பித்தன. செடிகள் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை உணவாக்கிக்கொண்டு ஆக்சிஜன் வாயுவை வெளியேற்றின.
சாமான்யர்களுக்கும் பரிச்சயமான மீன் வகைகள் தான் முதலும் தோன்றிய உருப்படியான ஆயிரினங்கள் (சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு).
இருபத்தைந்து கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி ஆறு கோடி ஆண்டுகள் வரை நடைபெற்றது, டைனோசர் அடங்கிய ‘ஊர்வன யுகம் தான்!
டைனோசர்கள் நிமிர்ந்தால் அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டிடம் உயரத்துக்கு இருந்தாலும் அவை போட்டது முட்டையே.
Discussion about this post