கல்வி உரிமைச் சட்டம், (2009) 21-A
அரசியலமைப்பு (எண்பத்தி ஆறாவது திருத்தம்) சட்டம் 2002, இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்த, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. இலவச கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009, அரசியலமைப்பு உறுப்பு 21-Aஇன் கீழ் சட்டமாக இயற்றப்பட்டது; இச்சட்டத்தின்படி அத்தியாவசிய விதிமுறைகள், தரநிலைகள் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு முறையான பள்ளியில் நிறைவான, சமமான, தரமான முழுநேரத் தொடக்கக் கல்விக்கான உரிமை வழங்கப்படுகிறது.
கல்வி உரிமைச் சட்டம் பின்வருவனவற்றை வழங்குகிறது:
அருகிலுள்ள பள்ளியில் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை இலவச கட்டாயக் கல்வி குழந்தைகளின் உரிமை.
கட்டாயக் கல்வி என்பது, ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச தொடக்கக் கல்வியை வழங்குவதும், கட்டாய சேர்க்கையையும், வருகையையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
‘இலவசம்’ என்பது, ஆரம்பக் கல்வியைத் தொடர்வதையும் முடிப்பதையும் தடுக்கும் என்பதால், எந்த ஒரு குழந்தையும் எந்த விதமான கட்டணம் அல்லது கட்டணங்கள் அல்லது செலவினங்கள் செலுத்தப் பொறுப்பாக்காதது ஆகும்.
இச்சட்டம் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தை, வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது.
இலவச கட்டாயக் கல்வியை வழங்குவதில் அரசாங்கங்கள், உள்ளூர் அதிகாரிகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு உள்ள கடமைகளையும் பொறுப்புகளையும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி மற்றும் பிற பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதலையும் இச்சட்டம் வரையறுக்கிறது.
இச்சட்டம் மாணவர் ஆசிரியர் விகிதங்கள், கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, பள்ளி வேலை நாட்கள், ஆசிரியர்-வேலை நேரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய விதிமுறைகளையும் தரநிலைகளையும் வகுக்கிறது.
மாநிலம் அல்லது மாவட்டம் அல்லது பகுதிக்கு மட்டுமில்லாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட மாணவர் ஆசிரியர் விகிதம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் ஆசிரியர்களை நியாயமான அளவில் பணியமர்த்துவதை இச்சட்டம் உறுதிப்படுத்துகிறது; இதனால் ஆசிரியர் பணியிடங்களில் நகர்ப்புற கிராமப்புற ஏற்றத்தாழ்வு இல்லை என்பதையும் உறுதி செய்கிறது.
பல்லாண்டு காலமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு, உள்ளாட்சி அமைப்பு, மாநில சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், பேரிடர் நிவாரணம் தவிர மற்ற கல்வி சாரா பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துவதையும் இச்சட்டம் தடை செய்கிறது.
இச்சட்டம் தகுந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களை, அதாவது கல்வித் தகுதிகளுடன் கூடிய ஆசிரியர்களை நியமிக்க உத்தரவாதம் வழங்குகிறது.
இச்சட்டம் உடல் ரீதியான தண்டனையை, மனரீதியான துன்புறுத்தலை தடை செய்கிறது; குழந்தைகளைச் சேர்ப்பதற்கான விலக்கல் நடைமுறைகளைத் தடை செய்கிறது; தலையீட்டு கட்டணம், ஆசிரியர்கள் தனிப் பயிற்சி நிலையங்கள் நடத்துவதையும் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் நடத்துவதையும் தடை செய்கிறது.
இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விழுமியங்களுக்கு இசைவாகப் பாடத்திட்டத்தை உருவாக்குவதை உத்தரவாதப்படுத்துகிறது; மேலும் இது குழந்தையின் அறிவு, திறன், திறமை ஆகியவற்றைக் கட்டியெழுப்பவும், குழந்தைகளின் அனைத்து வகையான வளர்ச்சியை உறுதிசெய்யவும், குழந்தைகளுக்கு இலகுவான கற்றல், குழந்தை மைய கற்றல் அமைப்பு வழியாக பயம், அதிர்ச்சி, பதட்டம் ஆகியவற்றிலிருந்து குழந்தையை விடுவிக்கவும் உதவுகிறது.
Discussion about this post